ஞாயிறு, 8 ஜனவரி, 2012

2012ம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமையும்: சந்தானம் மகிழ்ச்சி


தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர் சந்தானம், கடந்த 2011ம் ஆண்டை விட 2012ம் ஆண்டு தனக்கு சிறந்த ஆண்டாக அமையும் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களையும் தன் யதார்த்தனமான நகைச்சுவையால் மகிழ்வித்த நடிகர் சந்தானம்.
திரையுலக வாழ்க்கையில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து அவர்களுக்கு சமமான புகழைத் சம்பாதித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு சந்தானம் நடித்த சிறுத்தை, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சந்தானம் பேசியதாவது, எனக்கு 2011ம் ஆண்டை விட 2012ம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமையும் என்று நம்புகிறேன்.
இந்த ஆண்டில் கார்த்தியுடன் சகுனி, கௌதம் இயக்கத்தில் நீ தானே என் பொன் வசந்தம், சிம்புவுடன் வேட்டை மன்னன், போடா போடி என்று 15 திரைப்படங்களில் நடிக்க உள்ளேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக