செவ்வாய், 17 ஜனவரி, 2012

அனுஷ்காவை பாராட்டிய சுராஜ்

தமிழ் திரையுலகி்ல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் அனுஷ்காவிற்கு இயக்குனர் சுராஜ் புகழாரம் சூட்டி வருகிறார்.
சுராஜ் இயக்கத்தில் ஒர் புதிய தமிழ் திரைப்படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார்.
அவரைப்பற்றி சுராஜ் கூறுகையில், நானும் உதவி இயக்குனராக இருந்த காலத்திலிருந்து எத்தனையோ நடிகைகளைப் பார்த்துவிட்டேன்.
அவர்கள் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்தாலும், அங்கு வந்த பிறகு தன்னை அலங்காரம் செய்வதற்கு வெகு நேரம் எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் நடிகை அனுஷ்கா படப்பிடிப்பிற்கு முதல் நபராய் வந்து சேர்வதோடு விரைவாக அலங்காரம் செய்து படப்பிடிப்பிற்கு தயாராகி விடுவார்.
படப்பிடிப்பு தளத்தில் அவரைப் பார்த்தாலே நமக்கு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது என்று அனுஷ்காவை புகழ்ந்து கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக