![]() |
நயன்தாரா,பிரபுதேவாவின் மூன்றரை வருட காதல் முறிந்துள்ளது. சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டு பிரபு தேவாவை மணக்க நயன்தாரா பல மாதங்கள் காத்திருந்தார்.![]() விவாகரத்து செய்த முதல் மனைவி குழந்தைகளை அடிக்கடி சந்திப்பதும் அவர்களை அழைத்து வந்து தன்னிடம் தங்க வைப்பதுமாக இருந்தார். தான் இயக்கிய எங்கேயும் காதல் திரைப்பட கதாநாயகி ஹன்சிகா மோட்வானியுடன் நெருக்கமான நட்பும் வைத்து இருந்தார். இது நயன்தாராவுக்கு பிடிக்காததால் தகராறு மூண்டு காதலை முறித்துள்ளார். தற்போது நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். நாகார்ஜூனா ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அஜீத் ஜோடியாக தமிழ் படத்தில் நடிக்கவும் பேச்சு நடக்கிறது. மீண்டும் நடிப்பது குறித்து நயன்தாரா கூறியதாவது, நான் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தேன். அது எனக்கு நெருக்கடியான கால கட்டமாக இருந்தது. இப்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளேன். தெலுங்கு திரைப்படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்கிறேன். அது காதலுடன் கூடிய பொழுது போக்கு படம். இப்படத்தின் பெரும் பகுதி ஹைதராபாத்திலும், சில காட்சிகள் அமெரிக்காவிலும் படமாக உள்ளது. தமிழ் திரையுலகம் எனக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. தெலுங்கு பட உலகம் என்னை இன்னொரு படி உயரத்தில் கொண்டு போனது. ஒரு கன்னட படத்திலும் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார். |
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
நெருக்கடியான கால கட்டத்திலிருந்து மீண்டு வந்துள்ளேன்: நயன்தாரா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக