ஒரு சிலரை தவிர கொலிவுட்டில் நிறைய ஹீரோயின்களுக்கு கவர்ச்சியான தோற்றமே கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் அந்தப் பிரச்னை இல்லை. கவர்ச்சியாக உடலமைப்பை கவனமாக பராமரித்து வருகிறேன். கவர்ச்சியாக இருப்பது எளிதான விஷயம் கிடையாது.அது எனக்கு இறைவன் தந்த வரம். நான் நடித்த குள்ளநரிக் கூட்டம் படத்தில் எனது வேடம்பற்றி விமர்சிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அது நல்ல கதாபாத்திரம் தான். பல காட்சிகள் மனதை தொடும்படியாக நடித்திருந்தேன். நான் ஏற்கும் வேடங்களை பார்க்கும்போது எனது குடும்பத்தினரும் சந்தோஷப்பட வேண்டும் என்பது போன்ற வேடம்தான் ஏற்கிறேன். அவர்கள் முகம் சுழிக்கும் வேடங்களை ஏற்பதில்லை. தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் கவனம் செலுத்துகிறேன். சினிமாவில் போட்டி அதிகம். அதை கடந்துதான் ஒவ்வொருவரும் ஜெயிக்க வேண்டும். அந்த போட்டியில் நானும் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதை விட நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார். |
சனி, 11 பிப்ரவரி, 2012
கொலிவுட் கதாநாயகிகளுக்கு கவர்ச்சியான தோற்றம் இல்லை: ரம்யா நம்பீசன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னைப் பொறுத்தவரைக்கும் அந்தப் பிரச்னை இல்லை. கவர்ச்சியாக உடலமைப்பை கவனமாக பராமரித்து வருகிறேன். கவர்ச்சியாக இருப்பது எளிதான விஷயம் கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக