![]() |
கொலிவுட்டில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பாலிவுட்டில் ஏக் தீவானா தா என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.![]() இதுகுறித்து நாயகன் பிரதீக் கூறியதாவது, கெளதம் மேனனின் இயக்கத்தில், ஏக் தீவானா தா அழகான காதல் காவியமாக வந்துள்ளது. இதில் நான் சினிமாவில் இயக்குனராகத் துடிக்கும் மகாராஷ்டிர இளைஞனாக நடித்துள்ளேன். எமி ஜாக்ஸன், மலையாளி கிறிஸ்டியன் பெண்ணாக நடித்துள்ளார். இது யதார்த்தமான காதல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக அமைந்துள்ளது. படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசி, பல விடயங்களை பகிர்ந்து கொண்டோம். மற்றபடி எங்களுக்குள் ஒன்றும் கிடையாது. ஏமி ஜாக்சன் வெளிநாட்டு பெண் என்பதால், நான் அவருக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்துள்ளேன் என்று நாயகன் கூறியுள்ளார். |
வியாழன், 23 பிப்ரவரி, 2012
ஏமிக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த நாயகன் பிரதீக்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக