சனி, 11 பிப்ரவரி, 2012

ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம்


உலக சினிமாவுக்கே இன்று வழிகாட்டியாக இருக்கின்றன ஈரானிய கலைப்படங்கள்.
ஈரான் சினிமாவைப் பொறுத்தவரை அது தொடாத கதையோ உணர்ச்சியோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்மாதிரியான படங்களை அங்குள்ள தூய படைப்பாளிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
அங்கே வெகுஜன சினிமா என்பதே கலைப் படைப்பாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று சொல்லவேண்டும். ஈரான் படங்களில் குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் அத்தனையுமே சர்வதேச அங்கீகாரத்தை பெற்றிருகின்றன.
ஈரான் குழந்தைகள் வகை சினிமாவுக்கு உலகமெங்கும் கோடிக்கணக்கான தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக 'சில்ரன் ஆஃப் ஹேவன்' குழந்தைகள் படத்தின் டிவிடியை ஒரு சினிமா வேதப்புத்தகம் போல பெரும்பான்மை இந்திய குடுப்பங்களின் வீட்டு அலமாரிகளில் வைத்திருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு அந்தப் படம் பிரபலமாக இருக்கிறது. இப்படியிருக்க பல்வேறு உலகப்படங்களின் பாதிப்பில் பல தமிழ்படங்களை உருவாக்கும் தமிழ்படைப்பாளிகள் சிலர், ஈரான் படங்களை அப்படியே பயன்படுத்த முடியாமல் போய் விடுவதால்.
சில காட்சிகள், ஈரான் படத்தின் பாதிப்பில் உருவாகும் கதைக்கரு என்ற அளவிலேயே திறமையைக் காட்டி வந்தார்கள். அந்த வரிசையில் தற்போது 'பசங்க' படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் 'மெரினா' படம் ஈரானிய குழந்தைகள் படத்தின் நேரடியான பாதிப்பில் உருவான படம் என்று கோடம்பாக்கத்தின் உதவி இயக்குநர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
ஈரானிய சினிமாவின் பிரபல இயக்குநர் அமீர் நடேரி இயக்கத்தில் 1985-ல் வெளிவந்த 'தவதே' என்ற குழந்தைகள் படத்தின் பாதிப்பில் இருந்தே மெரினாவை உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள்.
'தவதே' படமும், கல்வியையை இழந்து கடற்கரை மற்றும் ஹார்பர்களில் அலைந்து திரியும் ஆதரவற்ற ஈரானிய குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களது கனவுகளை சித்தரிக்கும் படமே என்கிறார்கள்.
இந்தப் படத்தின் பாதிப்பில் பல உதவி இயக்குநர்கள் திரைக்கதை அமைத்து வைத்திருந்தார்களாம். ஆனால் பாண்டிராஜ் முந்திக்கொண்டார் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக