![]() |
தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வரும் லட்சுமி ராய், அடுத்து பாலிவுட் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.![]() என்னைப்பற்றி திரையுலகில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் பற்றி கவலைப்படுவதில்லை. என்னுடைய திருமணம் பற்றி நிறைய பேர் கவலையோடு விசாரித்துள்ளார்கள். மூன்று வருடத்துக்கு பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அதுவரை நடித்துக் கொண்டே இருப்பேன் என்றும் நான் தெரிவித்துள்ளேன். இந்த வருடம் பாலிவுட்டில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கிறேன். விரைவில் பாலிவுட் படப்புள்ளிகள் அது பற்றிய அறிவிப்பை வெளியிடப்போகிறார்கள். நிச்சயம் மூன்று வருடத்துக்கு பிறகு எனக்கு திருமணம் நடக்கும். அதுவும் காதல் திருமணமாகத் தான் இருக்கும் என்று லட்சுமி ராய் கூறியுள்ளார். |
திங்கள், 6 பிப்ரவரி, 2012
மூன்று வருடத்துக்கு பிறகு காதல் திருமணம்: லட்சுமி ராய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக