சனி, 25 பிப்ரவரி, 2012

5D புகைப்பட கருவியில் காந்தம் படம்


கொலிவுட்டில் “காந்தம்” என்ற புதிய திரைப்படத்தை 5D புகைப்பட கருவியில் உருவாக்கியுள்ளார்கள்.
கொலிவுட்டில் நியு மூன் ஸ்டுடியோஸ் படக்கம்பெனி தயாரிக்கும் காந்தம் படத்தில் நாயகனாக தேஜ், அறிமுக நாயகி ராஷ்மி இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் பாடலை படமாக்க 5D புகைப்பட கருவியை இயக்குனர் சரவணன் பயன்படுத்தியுள்ளார்.
படத்துக்கு பிரேம் ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதாப் இசையமைத்துள்ளார்.
மேலும், திரைப்பட தொகுப்பு-விஸ்வா, கலை-சுரேஷ், ஓக்ஸன்- 'மிரட்டல்' செல்வம் மற்றும் பலர் பணியாற்றியுள்ளார்கள்.
இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, நான் காமராஜ், காதலுக்கு மரணமில்லை என்று சுமார் 10 படங்களுக்கு மேல் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளேன்.
நாயகன் தேஜ் தனது நண்பர் எடுக்கும் இந்த காந்தம் படத்தை இயக்கித் தரும்படி கேட்டுக்கொண்டார். நானும் உற்சாகமாக களமிறங்கியுள்ளேன்.
இது காதல் பொழுதுபோக்கு படம். படத்தில் வரும் பாடல் காட்சியை படமாக்க 5D புகைப்பட கருவியை பயன்படுத்தியுள்ளோம். இந்த புகைப்பட கருவி வினாடிக்கு ஆயிரம் பிரேம்களை எடுக்கக் கூடியது.
பாடல் காட்சிகள் அட்டகாசமாக படமாகியுள்ளன. பெங்களூர், கொடைக்கானல், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம் என்று இயக்குனர் சரவணன் கூறியுள்ளார்.
இந்த காந்தம், ரசிகர்களை கவர்ந்திழுக்குமா என்பது படம் வெளியானதும் தெரியவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக