![]() |
கொலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் பட வேலைகள் தொடங்கியுள்ளன. இதில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.![]() கோச்சடையான் படத்திற்காக நடிகர், நடிகைகளுக்கு மேக்கப் போட்டு கடந்த இரு வாரங்களாக புகைப்படபிடிப்பு நடந்தது. தீபிகா படுகோனே சிவப்பு என்பதால் ரஜினிக்கு ஜோடி பொருத்தமாகும் வகையில் கிராபிக்சில் அவரது நிறம் கறுப்பாக்கப்படுகிறது. இதற்காக அவர் சென்னை வந்தார். தீபிகா படுகோனேயை படம் எடுத்து ரஜினியை போல நிறம் மாற்றும் பணிகள் நடந்தன. இப்படத்தில் ரஜினியின் ருத்ர தாண்டவ நடனம் இடம் பெறுகிறது. இதையும் உயர் தொழில்நுட்பத்தில் படமாக்க உள்ளனர். கோச்சடையானின் பெரும் பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் லண்டன் புறப்பட உள்ளனர். கோச்சடையான் படம் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மன்னனை பற்றிய கதை. சரித்திர கால அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். |
சனி, 18 பிப்ரவரி, 2012
நிறம் மாறும் தீபிகா படுகோன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக