![]() |
கொலிவுட்டில் இயக்குனர் செல்வராகவன் மயக்கம் என்ன படத்தினை அடுத்து இரண்டாம் உலகம் படத்தினை இயக்கி வருகிறார்.![]() ஆர்யா, அனுஷ்கா நடித்து வரும் இரண்டாம் உலகத்தில் முதன்முறையாக செல்வராகவனுடன் இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் ஜோடி சேர்ந்துள்ளார். இரண்டாம் உலகம் படத்தில் இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகளை பிரம்மாண்டமாக எடுக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளார். இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் அனைத்தையும் பிரேசில் நாட்டில் படமாக்க இயக்குனர் செல்வராகவன் திட்டமிட்டுள்ளார். இதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடங்களை தெரிவு செய்ய செல்வராகவன், ஒளிப்பதிவாளர் ராம்ஜி இருவரும் பிரேசில் சென்று இருக்கிறார்கள். இரண்டாம் உலகம் படத்தினை PVP சினிமாஸ் தயாரித்து வருகிறது. |
வியாழன், 9 பிப்ரவரி, 2012
இரண்டாம் உலகம் திரைப்படத்திற்காக செல்வராகவன் பிரேசில் பயணம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக