வியாழன், 23 பிப்ரவரி, 2012

கர்ணன் முன்னோட்டக்காட்சி வெளியீடு


கர்ணன் திரைப்படத்திற்கான முன்னோட்டக்காட்சி வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெற்றி பெற்ற வரலாற்று திரைப்படமான கர்ணன்,நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டுள்ளது.
கர்ணன் திரைப்படம் புதிய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, இதன் முன்னோட்டக்காட்சி வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று காலை நடைபெற்றது.
இவ்விழாவில் கமலா திரையரங்கு உரிமையாளர் வி.என்.சிதம்பரம், சிவாஜி மகன் ராம்குமார், வி.சி.குகநாதன், ஒய்.ஜி.மகேந்திரன், பி.சுசிலா, மதுவந்தி உட்பட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் சேரன் பேசும் போது, எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களின் தலைப்புகளை புதுப்பிப்பதற்கு அனுமதிக்க கூடாது. தயாரிப்பாளர் சங்கம் இதற்கு தடை விதிக்க வேண்டும்.
பில்லா, மாப்பிள்ளை போன்ற படங்கள் ரீமேக் செய்யப்படுகின்றன. தைரியம் இருந்தால் சிவாஜி படங்களை ரீமேக் செய்யட்டும். சிவாஜி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். அங்கு சிவாஜி நடித்த அனைத்து படங்களின் தொகுப்பையும் வைக்க வேண்டுமென்று பேசினார்.
கமலா திரையரங்கு உரிமையாளர் வி.என்.சிதம்பரம் பேசும்போது, லண்டன் மியூசியத்தில் சிவாஜிக்கு மெழுகு சிலை வைக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக