![]() |
தென்னிந்திய திரைப்பட நாயகர்களின் படங்களின் நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.![]() தமிழில் விஜய்யுடன் 'துப்பாக்கி', சூர்யாவுடன் 'மாற்றான்' என இரு முன்னணி நாயகர்களின் படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார். இவ்விரண்டு படங்களுக்குமே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. பாலிவுட் திரையுலகில் தமிழில் வெளியான 'சிங்கம்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கானின் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். அப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஆனது. தற்போது காஜல் அகர்வால், பாலிவுட்டில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான நிரஜ் பாண்டே( 'A WEDNESDAY' இயக்குனர்) இயக்க இருக்கும் 'SPECIAL CHABBIS' என்னும் படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு திரையுலகினை தொடர்ந்து இந்தியிலும் முன்னணி நாயகர்களின் படங்களின் வாய்ப்புகள் வருவதால் காஜல் அகர்வால் சந்தோஷத்தில் சிக்கி தவிக்கிறார். |
புதன், 29 பிப்ரவரி, 2012
சந்தோஷத்தில் காஜல் அகர்வால்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக