![]() |
கொலிவுட் நடிகர்கள், நடிகைகள், திரையுலக முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் தங்களுடைய திரைப்பணிகளை பார்ப்பதோடு மற்ற விழாக்களிலும் ஈடுபட்டுவருகிறார்கள்.![]() விழாவில் நடிகை அஞ்சலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். கவிப்பேரரசு வைரமுத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது கூறியதாவது, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் ஈரோடு. இந்த மண்ணுக்கு வருபவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தற்போதைய சூழலில் பாவடை தாவணி அற்றுபோய் சுடிதார் உடை வந்து விட்டது. நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப இந்த சுடிதார் உடை ஏற்புடையதாகி விட்டது. இதனால் கலாசாரம் ஒன்றும் பாதிக்கப்படாது. இன்னும் சொல்லப்போனால் இந்த சுடிதார் உடைதான் பெண்களுக்கு பாதுகாப்பானது. பெண்களின் கற்புக்கு இந்த சுடிதார் உடை அரணாக உள்ளது என்று கவிஞர் வைரமுத்து பேசினார். |
சனி, 11 பிப்ரவரி, 2012
சுடிதார் பெண்களுக்கு பாதுகாப்பானது: வைரமுத்து
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக