வியாழன், 9 பிப்ரவரி, 2012

புதிய அவதாரம் எடுக்கும் சித்தார்த்


ஷங்கரின் பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சித்தார்த்.
தமிழில் ஏனோ ராசியில்லாமல் போக தெலுங்கு, இந்தி என்று தனது பார்வையை திருப்பினார். இவரை திரும்ப தமிழுக்கு 180 படம் மூலம் அழைத்து வந்தார் இயக்குநர் ஜெயகாந்த்.
இப்போது சிறு இடைவெளிக்கு பிறகு காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் தமிழ் ரசிகர்கள் பக்கம் வருகிறார் சித்தார்த். இந்தமுறை நடிகராக மட்டும் இல்லாமல், தயாரிப்பாளராக, பாடகராக, நடிகராக புதிய முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார்.
இதுபற்றி சித்தார்த் நம்மிடம் பேசும்போது, நிறைய பேர் ஏன்? தமிழில் நடிக்கலேன்னு கேட்கிறாங்க. எனக்குனு சரியான கதைகள் ஏதுவும் கிடைக்கல. தெலுங்கில் நான் நடித்த பல படங்களில் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் ரீ-மேக் ஆகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
அதனால் இனி தமிழ் படங்களில் கவனம் செலுத்த போறேன். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு படம் தயாரிக்கணும் என்ற ஆசையும் இருந்தது. அது காதலில் சொதப்புவது படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. இனி என் கம்பெனியில் வருஷத்துக்கு இரண்டு படம் தயாரிக்க முடிவு செய்திருக்கேன்.
காதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பாய்ஸ் படத்தில் என்னோடு நடித்த தமன் தான் இசையமைக்க உள்ளார். அவர் இசையில் மதன் கார்கி எழுதிய பாட்டையும், இயக்குநர் பாலாஜி எழுதிய லவ் பாட்டு என நான் இரண்டு பாட்டு பாடியிருக்கேன்.
படமும் ரொம்ப நல்லா வந்திருக்கு. காதலர் தினத்தில் படத்தை வெளியிட உள்ளோம். இளைஞர்கள் கண்டிப்பா ரசிப்பாங்கா, அமலாபால், சித்தார்த் ஆகியோரை மறந்து எந்த கேரக்டராகவே தங்களை பார்க்க முடியும் என்றவர், கண்டிப்பா இனி என்னை நிறைய தமிழ் படங்களில் பார்ப்பீர்கள் என்று சொல்லி முடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக