![]() |
அதற்கான கதையை முடிவு செய்வதில் தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆர்.கே.செல்வமணி உட்பட இருபதுக்கும் மேற்பட்ட இயக்குநர்களிடம் விஜயகாந்த் கதை கேட்டுள்ளார்.![]() நல்ல கதைக்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்பது தன் மகனுக்கு விஜயகாந்த் கூறும் அறிவுரையாகும். மேலும் இப்படி தான் கதை கேட்டு வரும் காலகட்டத்தில், சண்முக பாண்டியனை தினமும் நீச்சல், குதிரை ஏற்றம் மற்றும் பலவிதமான சண்டைப் பயிற்சிகளை தனக்கு மிகவும் நெருக்கமான பயிற்சியாளர்களை வைத்து கற்றுத்தர ஏற்பாடு செய்திருக்கிறார். கதை சொல்ல தேடி வருகிற இயக்குநர்கள் மட்டுமின்றி, சில முன்னணி இயக்குநர்களிடம் சற்றும் தயங்காமல் என் பையனுக்கு ஒரு நல்ல கதை இருந்தால் படம் அவனை நடிக்கவைத்து ஒரு அறிமுகத்தைக் ஏற்படுத்திக் கொடுக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். |
சனி, 18 பிப்ரவரி, 2012
இயக்குநர்களிடம் தயக்கமின்றி மகனுக்காக வாய்ப்பு கேட்ட விஜயகாந்த்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக