![]() |
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வயிற்றில் இரண்டு பக்கங்களிலும் அறுவை சிகிச்சை நடைபெற்றது.![]() அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அமிதாப்பச்சன் உடல்நிலை வேகமாக முன்னேறியது. எனவே, அவர் இன்று வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்று வைத்தியசாலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தான் விரைவில் குணம் அடைய வேண்டி பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு, அமிதாப்பச்சன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமிதாப் தனது ட்விட்டரில், உங்களுடைய அன்பும், வாழ்த்துக்களும் ஒருபோதும் தோற்றது கிடையாது. உங்களுக்கு நன்றி என்று அவர் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த 1982ம் ஆண்டு கூலி படத்தின் படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது அமிதாப்பச்சனுக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு அடிவயிற்றில் குடல் பகுதியில் பல அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
திங்கள், 13 பிப்ரவரி, 2012
அமிதாப் பச்சன் வீடு திரும்புகிறார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக