இந்நிலையில் கடந்த வாரம் கரீனா கபூர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் போது எடுக்கப்படும் புகைப்படம் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்த கரீனாவின் வயிறு பெரிதாக காணப்பட்டது. துப்பட்டாவில் வயிற்றை மூடியபடி அவர் நடந்து சென்றார். அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது.இதை அவரது மேனேஜர் மறுத்தார் மேலும் கரீனா புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இம்மாத கடைசியில் இருந்து 30 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இதற்கிடையில் ஜெனிலியா திருமண விழாவில் சைப் அலியுடன் கரீனா கலந்துகொண்டார். சேலை அணிந்து வந்த அவர், முந்தானையால் வயிற்றை மறைத்திருந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ என்ற படத்தை தயாரித்த ஏக்தா கபூர் அடுத்து ‘எ டைம் இன் மும்பை’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் கதாநாயகியாக கரீனா நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் அப்படத்தில் இருந்து திடீரென வெளியேறியிருக்கிறார் கரீனா. இதையடுத்து, கரீனா நிஜமாகவே கர்ப்பம்தானா என்ற சந்தேகம் பாலிவுட்டில் அதிகரித்திருக்கிறது. சைப் அலிகானுக்கும், கரீனாவுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் இவர்களது திருமணம் நடத்த திட்டமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. |
வியாழன், 9 பிப்ரவரி, 2012
கரீனா புதிய படத்திலிருந்து விலகியது ஏன்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்த கரீனாவின் வயிறு பெரிதாக காணப்பட்டது. துப்பட்டாவில் வயிற்றை மூடியபடி அவர் நடந்து சென்றார். அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக