![]() |
நடிகர் ஒருவரை தமன்னா காதலித்ததாகவும் அது தோல்வியில் முடிந்த தாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் அஹமத் இயக்க ஜீவா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் தமன்னா நடிக்கிறார் என்று கொலிவுட்டில் தகவல் பரவியது. இதை தமன்னா மறுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில் என்னை பற்றி பல வதந்திகள் வருவது தெரியும். தமிழில் நடிக்காததற்கும் ஒரு வதந்தி பரப்புகிறார்கள். தமிழில் நடிக்கக் கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. அதனால் தான் நடிக்கவில்லை. மற்றபடி, வேறு எந்த காரணமும் இல்லை. கடைசியாக ‘வேங்கை’ படத்தில் நடித்தேன். அதற்கு பிறகு வாய்ப்பு வரவில்லை. தமிழில் நான் ஒரு படம் ஒப்புக்கொண்டிருப்பதாக வரும் தகவலும் வதந்திதான். வாய்ப்பு வந்தாலும் மார்ச், ஏப்ரலுக்கு பிறகுதான் திகதி தர முடியும். தெலுங்கில் அதிகமாக நடித்து வருகிறேன். இந்தியிலும் நிறைய வாய்ப்பு வருகிறது. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு தமன்னா கூறினார். |
சனி, 11 பிப்ரவரி, 2012
காதல் தோல்வியால் படங்களை நழுவவிடும் தமன்னா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக