![]() |
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை தனது நகைச்சுவையான தொகுப்பால் வழங்கி சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.![]() மெரினா படத்தில் மட்டுமல்லாது, தனுஷ் நடித்துள்ள 3 படத்தில் முக்கிய பாத்திரத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இதையடுத்து எழில் இயக்கும் மனம்கொத்திப் பறவை படத்தின் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கிய எந்திரன் மற்றும் நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லீ இயக்க இருக்கும் அடுத்த படத்தின் நாயகனாக மெரினாவுக்கு முன்னரே சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகிவிட்டார். அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த முகப்புத்தகம் என்ற குறும்படம் யூடிபில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. |
திங்கள், 13 பிப்ரவரி, 2012
அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக