![]() |
தேசிய விருது பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்து, தோனி படத்தை இயக்கியுள்ளார்.![]() மகேஷ் மஞ்ச்ரேகர் கதையில் எடுக்கப்பட்ட மராத்தி படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் பிரகாஷ்ராஜ் எடுத்துள்ளார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பிரகாஷ் ராஜ் உடன் ராதிகா அப்டே, ஆகாஷ், நாசர், சரத்பாபு, பிரமானந்தம், சிங்கமுத்து மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இந்திய கிரிக்கட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி மாதிரி சிறந்த கிரிக்கட் வீரராக வர வேண்டும் என்று பிரகாஷ்ராஜின் மகன் ஆகாஷ் கனவு காண்கிறான். மகன் படிப்பில் அக்கறை காட்டாமல் கிரிக்கட் மேல் ஆர்வம் காட்டுவதால் பிரகாஷ்ராஜ் கொதிப்படைகிறார். உடல்நிலை பாதிப்பில் அவதிப்படும் சிறுவன் எப்படி கிரிக்கட் வீரனாக மாறுகிறான் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் கொடுமையால் அதிக மதிப்பெண் எடுக்க திணறும் சின்னஞ்சிறார்களின் பிரச்சினையை தோனி திரைப்படத்தின் மூலம் பிரகாஷ்ராஜ் ஆவணப்படுத்தியுள்ளார். |
வியாழன், 9 பிப்ரவரி, 2012
ஊடகத்தினருக்கான தோனி படக்காட்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக