![]() |
கொலிவுட்டில் நாயகன் கார்த்தி சகுனி திரைப்படத்திற்கு பின்பு இயக்குனர் சுராஜ் இயக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார்.![]() பையா படத்துக்கு பிறகு நாயகன் கார்த்தியுடன் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் இணைகிறார். இந்தப்படத்தில் சுமன், மிலிந்த் சோமன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். இதுகுறித்து சுராஜ் கூறியதாவது, திரைக்கதையில் இருவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். படத்துக்கு மறைந்த நடிகர் ரகுவரன் மாதிரி ஒரு நடிகரை வில்லனாக போட வேண்டும் என யோசித்தோம். இதற்கு மிலிந்த் கன கச்சிதமாக பொருந்தி வந்தார். படத்தின் ஓக்ஸன் காட்சியில் நாயகன் கார்த்தியுடன் சுமன், மிலிந்த் இருவரும் மோதுகிறார்கள் என்று கூறியுள்ளார். |
சனி, 25 பிப்ரவரி, 2012
அலெக்ஸ் பாண்டியன் படத்தில் இரு வில்லன்களோடு மோதும் கார்த்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக