![]() |
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர நடிகை தீபிகா படுகோன், ரேஸ்-2 என்ற தன்னுடைய படத்திலிருந்து விலகிவிட்டார் என்று ரமேஷ்தாரணி குற்றம் சாட்டியுள்ளார்.![]() மேலும் இதுகுறித்து தீபிகாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையானில் நடிப்பதற்காகவே தீபிகா படுகோன் ரேஸ் 2 படத்திலிருந்து விலகியதாகவும் தகவல் வெளியாகின. இதுகுறித்து நாயகி தீபிகா படுகோன், ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிப்பதற்காக ரேஸ்-2 படத்தில் இருந்து நான் விலகவில்லை. ரஜினியுடன் நடிக்க ரொம்ப நாளைக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. ரேஸ்-2 படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்து விட்டு படப்பிடிப்பு நடத்தாமல் 1 1/2 வருடம் தாமதம் செய்தனர். இதனால் என்னுடைய திகதிகள் விரயமானது. வேறு படங்களுக்கும் ஒப்பந்தமாகி உள்ளதால் பிரச்சினைகள் எழுந்தது. எனவே ரேஸ் 2 படத்திலிருந்து விலகினேன். என்னிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது. நான் விரைவில் பதில் அனுப்புவேன் என்று தெரிவித்துள்ளார். |
திங்கள், 13 பிப்ரவரி, 2012
தன் மீதுள்ள புகாருக்கு பதிலளித்த தீபிகா படுகோன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக