![]() |
பாலிவுட்டில் ஓம் சக்தி ஓம் திரைப்படத்தின் மூலம் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து தீபிகா படுகோன் பிரபலமானார்.![]() பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ரமேஷ் தரணி ரேஸ்-2 என்ற இந்தி படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மும்பையில் உள்ள சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீபிகா படுகோன் மீது புகார் கொடுத்துள்ளார். நான் டிப்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரேஸ் 2 இந்திப் படத்தை தயாரித்து வருகிறேன். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் ஒரு வாரம் படப்படிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இப்போது திடீர் என்று ரேஸ் 2 படத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூறுகிறார். ஹாலிவுட் பட வாய்ப்பு வந்ததைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இதனால் ரேஸ் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடியாமல் தடைபட்டு, எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தீபிகா படுகோன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ரமேஷ் தரணி கூறியுள்ளார். |
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012
தீபிகா படுகோன் மீது தயாரிப்பாளர் புகார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக