![]() |
கொலிவுட்டில் நாயகன் கார்த்தியுடன் நாயகி அனுஷ்கா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.![]() பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரித்து வருகிறார். கார்த்தி-அனுஷ்காவுடன், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கார்த்தி நடிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். பெயரிடப்படாமல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது. கதைக்கு ஏற்றவாறு பல்வேறு தலைப்புகளை ஆலோசித்து வந்த சுராஜ், தற்போது இப்படத்திற்கு அலெக்ஸ் பாண்டியன் என்று தலைப்பிட்டு இருக்கிறார். மூன்று முகம் படத்தில் பொலிஸாக வரும் ரஜினியின் அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது. அதைப் போலவே கார்த்திக்கு இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இயக்குனர் இருக்கிறார். |
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012
அலெக்ஸ் பாண்டியனாக மாறிய கார்த்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக