![]() |
பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் வயிற்று வலி காரணமாக மும்பையில் உள்ள 7 ஸ்டார் தனியார் வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம்(10.2.2012) அனுமதிக்கப்பட்டார்.![]() கடந்த 1983ம் ஆண்டு நடந்த கூலி இந்திப் படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சியில் அவருக்கு குடலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருக்கு அடிபட்ட இடத்தில் வலி ஏற்பட, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது மீண்டும் அதே இடத்தில் வலி எடுத்ததால் இன்னொரு முறை சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அபிஷேக் பச்சன் டிவிட்டரில், அப்பாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது அப்பா, நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். |
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012
அப்பா நலமுடன் இருக்கிறார்: அபிஷேக் பச்சன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக