![]() |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் 3D படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.![]() இந்நிலையில் வரும் மார்ச் 2ம் திகதி முதல் இங்கிலாந்தில் ‘கோச்சடையான்’ படப்பிடிப்புகள் நடைபெறுகிறது. ‘கோச்சடையான்’ பட பணிக்காக ஹொங்காங் சென்றிருக்கும் ரஜினியின் இளையமகளும், இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் கூறும்போது, கோச்சடையான் பணிக்காக பட குழுவினருடன் ஹொங்காங்கில் இருக்கிறேன். பணிகள் சிறப்பாக நடக்கிறது. மார்ச் 2ம் திகதி முதல் இங்கிலாந்தில் படப்பிடிப்ப நடைபெற உள்ளது என்று கூறி உள்ளார். இந்நிலையில் 'கோச்சடையான்' படத்தில் மறைந்த நாகேஷ் நடிப்பதுபோல், அவரது காட்சிகள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் தன்னுடைய இயல்பான நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் இன்னும் நிலைத்து நிற்கும் நாகேஷை மீண்டும் திரையில் கோச்சடையான் படக்குழு காண்பிக்க உள்ளது. |
புதன், 29 பிப்ரவரி, 2012
கோச்சடையானில் நடிக்கிறார் நாகேஷ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக