![]() |
இதுகுறித்து அவர் கூறுகையில் என் மருமகள் ஐஸ்வர்யா தனுஷ் ‘3’ படம் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார்.![]() தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் மார்ச் மாதம் படம் வெளியாகிறது. இந்தியில் 600 பிரின்ட் போடப்படுகிறது. தமிழில் 300 முதல் 400 பிரின்ட் போடப்படும். ‘3’ என்றால் என்ன என்கிறார்கள். தனுஷ், ஸ்ருதிஹாசன் இருபாத்திரம் 3வது கதாபாத்திரம் யார் என்பதுதான் 3க்கு அர்த்தம். இந்த படத்தில் ரஜினி நடிக்கவில்லை. என் இயக்கத்தில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தினேன், அதேபோல் என் பேனரில் செல்வராகவனை இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். இப்போது ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தி உள்ளேன். புதுமுகங்களை வைத்துத்தான் நான் படம் இயக்குகிறேன். அந்த வகையில் இனி தனுஷை வைத்து இயக்க மாட்டேன். புதுமுகங்களை வைத்து அசுரகுலம் என்ற படம் இயக்குகிறேன். அடுத்து மலையாளத்தில் ஒரு படம் இயக்க உள்ளேன். தமிழ் கலைஞர்கள் உலகப் புகழ்பெற்றாலும் அவரை பாராட்டும் எண்ணம்மட்டும் இங்கு வருவதில்லை. தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு கிடைக்கிறது. ஆனால் தமிழ் கலைஞனான அவனை இங்குள்ளவர்கள் பாராட்டாதது வருத்தம் அளிக்கிறது. |
சனி, 25 பிப்ரவரி, 2012
இனி தனுஷை வைத்து படம் இயக்க மாட்டேன்: கஸ்தூரி ராஜா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக