இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவியாளராக பணியாற்றிய ஆண்ட்ரூ லூயிஸ் 'லீலை' படத்தை இயக்கியுள்ளார். அறிமுக இயக்குனரான ஆண்ட்ரூக்கு எஸ்.ஜே. சூர்யா உற்சாகமளித்து, 'லீலை' படத்தை எடுக்க வைத்துள்ளார் என்று திரையுலகம் கூறுகிறது.'இது காதலும் நகைச்சுவையும் கலந்த பொழுதுபோக்கான திரைப்படம். இதில் இந்தி 'ஷைடான்' படத்தில் நடித்த ஷிவ் பண்டிட் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக மன்சி ப்ரேக் நடித்துள்ளார். இருவரும் விளம்பரங்களில் நடித்துள்ளார். லீலையில் மனதை வருடும் மென்மையான காதலை சொல்லியிருக்கிறேன். இந்தப்படத்தில் சந்தானம் கலகலவென ரசிகர்களை சிரிக்க வைப்பார். ஷிவ் மற்றும் மன்சி இருவரும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தின் கதை மற்றும் படமாக்கப்பட்ட விதத்திலும் வித்தியாசமான அம்சங்கள் இருப்பதை படத்தை பார்த்து ரசிகர்கள் உணர்வார்கள் என்று இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் தெரிவித்துள்ளார். லீலை படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் அறிவித்துள்ளார். |
வியாழன், 23 பிப்ரவரி, 2012
மென்மையான காதலை சொல்லும் லீலை திரைப்படம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அறிமுக இயக்குனரான ஆண்ட்ரூக்கு எஸ்.ஜே. சூர்யா உற்சாகமளித்து, 'லீலை' படத்தை எடுக்க வைத்துள்ளார் என்று திரையுலகம் கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக