![]() |
கொலிவுட்டிலிருந்து நீண்ட மாதங்களாக விலகியிருந்த நயன்தாரா, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.![]() இதையடுத்து நயன்தாராவின் முன்னாள் காதலர் சிம்புவுடன் சேர்ந்து நடிக்குமாறு முன்னணி இயக்குனர் ஒருவர் நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ஒஸ்தி திரைப்படத்தில் நயன்தாராவை சிம்புவுடன் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அந்த முயற்சி வீணானது. தற்போது பிரபுதேவாவிடமிருந்து தனது காதலை நயன்தாரா முழுவதும் முறித்து கொண்டுள்ள நிலையில், சிம்புவுடன் நடிக்க முயற்சி மேற்கொண்டிருப்பது வெற்றியடையும் என்று திரையுலகத்தினர் கூறி வருகின்றனர். |
வியாழன், 16 பிப்ரவரி, 2012
மீண்டும் சிம்புவுடன் நயன்தாரா இணைவாரா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக