புதன், 4 ஜனவரி, 2012

இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜீவா


தமிழ் திரையுலகில் வாமனன் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜீவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் கோ திரைப்பட வெற்றிக்கு பிறகு ஜீவா இயக்குனர் ஷங்கரின் 'நண்பன்' ,கெளதம் மேனனின் 'நீ தானே என் பொன் வசந்தம்' படங்களில் நடித்துள்ளார்.
நாயகன் ஜெய் நடிப்பில் வாமனன் படத்தை இயக்கிய அஹமத் இயக்கும் படத்தில் ஜீவா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் நாயகன் ஜீவா உடன் த்ரிஷா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் பரவியுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளின் திகதிகளை இயக்குனர் அஹமத் அலசியுள்ளார்.
என் படத்தின் திரைக்கதை த்ரிஷாவுக்கு பிடித்துள்ளது. படம் சம்பந்தமாக நானும் த்ரிஷாவும் பேசியுள்ளோம். ஜீவா உடன் த்ரிஷா இணைந்து இப்படத்தில் நடிப்பாரா என இப்போதே எதுவும் கூற முடியாது என்று அஹமத் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஜீவா-த்ரிஷா ஜோடியின் நடிப்பில் படம் பண்ண தயாரிப்பாளர்கள் காத்திருப்பதாக பட வட்டாரம் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக