புதன், 4 ஜனவரி, 2012

லட்சுமி மஞ்சு தயாரிக்கும் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா


தமிழ் திரையுலகின் இசைஞானி இளையராஜா தெலுங்கு மொழியில் உருவாகும் படத்துக்கு இசையமைக்கிறார்.
கொலிவுட்டில் தற்போது பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் உருவான தோனி படத்துக்கு இசையமைத்த இளையராஜா அடுத்து லட்சுமி மஞ்சு தயாரிக்கும் தெலுங்கு படத்துக்கு இசையமைக்கிறார்.
தெலுங்கில் உருவாகும் குண்டேல்லோ கோடரி படத்தை எடுக்கும் லட்சுமி மஞ்சு, ஆதி பினிசெட்டி, டாப்சீ, சந்தீப் கிஷன் ஆகியோருடன் நடிக்கிறார்.
குண்டேல்லோ கோடரி படம் எண்பதுகளின் பின்னணியில் நடக்கும் காதல் பொழுது போக்கு சித்திரமாகும். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். சென்னையில் பாடல் பதிவு நடக்கிறது.
இளையராஜா சாருடன் இணைந்து பணியாற்றுவதை நினைத்தால் உடம்பெல்லாம் சிலிர்க்குது என்று லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார். இயக்குனர் மணிரத்னத்தின் நாயகிகள் பட்டியலில் லட்சுமி மஞ்சும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக