![]() |
தமிழ் திரையுலகில் கோ படத்தில் ஜீவாவின் தோழனாக நடித்த அஜ்மல் வெற்றி செல்வன் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.![]() இந்தப்படத்துக்கு மணிசர்மா இசையமைக்க ஆடுகளம் படத்தின் தொகுப்பாளர் கிஷோர் கருப்பம்பட்டி படக்குழுவோடு இணைந்து பணியாற்றுகிறார். இயக்குனர் ருத்ரன் இப்படத்தை இயக்குகிறார். சமூகத்தில் அங்கீகாரம் பெறாத மூன்று பேர்களின் கதையை படமாக்குகிறோம். இதில் அஜ்மல் மாணவராக நடிக்கிறார். சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில்(Reality show) வெற்றி பெற்ற ஷெரிப் நடன ஆசிரியராக வருகிறார். சிங்காரவேலு படத்துக்கு பிறகு பிரபல பின்னணி பாடகர் மனோ இப்படத்தில் பேராசிரியராக முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். நாளை(5.1.2012) படப்பிடிப்பு தொடங்குகிறது என்று இயக்குனர் ருத்ரன் கூறியுள்ளார். |
புதன், 4 ஜனவரி, 2012
அஜ்மல் நடிப்பில் வெற்றிசெல்வன் படம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக