![]() |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை த்ரிஷா. இவர் தமிழ் தவிர கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.![]() இதுபற்றி த்ரிஷா கூறுகையில், நான் இப்போது ஒரு தொழில்முறை முதலீட்டாளர், பங்குச் சந்தை, தங்கம், பரஸ்பர நிதி உட்பட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறேன். முதலீட்டு யுக்திகளை என் தாய் தான் கற்றுக் கொடுத்தார், எனது முதலீடுகளை தீர்மானிப்பதும், நிர்வாகிப்பதும் அவர் தான். மூன்று முதல் 5 ஆண்டுகளில் முதிர்வு அடையக்கூடிய குறுகிய கால முதலீட்டு திட்டங்களையே நான் தெரிவு செய்வேன். அந்த முதலீடுகள் மூலம் கிடைக்கும் லாபத்தை மறு முதலீடு செய்வேன். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை நிரந்தர வைப்பு நிதி திட்டம், சொத்துக்கள், பரஸ்பர நிதிகள் போன்ற முதலீட்டு திட்டங்களில் வீணாக்க விரும்பவில்லை. எவை பாதுகாப்பான முதலீடுகளோ அதன் மீது தான் முதலீடு செய்துள்ளேன். ஒரு முடிவை எடுக்கும் முன்பு எனது ஆடிட்டர் மற்றும் பங்கு வர்த்தக தரகர் ஆகியோரின் உதவியை நாடுவேன் என்று கூறினார். |
புதன், 4 ஜனவரி, 2012
நான் தொழில் முறை முதலீட்டாளர்: த்ரிஷா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக