செவ்வாய், 3 ஜனவரி, 2012

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் வேட்டை திரைப்படம்: சல்மான் கான் நாயகனாக அறிவிப்பு


தமிழில் ஆர்யா, மாதவன் நடித்துள்ள வேட்டை திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் நடித்து இருக்கும் படம் வேட்டை. சமீரா ரெட்டி, அமலா பால் நாயகிகளாக நடிக்க யுவன் சங்கர்ராஜா இசையமைத்து இருக்கிறார்.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, யு.டிவி நிறுவனம் இப்படத்தினை பிரம்மாண்டமாக வெளியிட தீர்மானித்து இருக்கிறது.
இப்படத்தின் கதை அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யும் விதத்தில் லிங்குசாமி அமைத்து உள்ளார். இந்நிலையில் வேட்டை திரைப்படம் முதலில் இந்தியில் ரீமேக் ஆகிறது.
ஆர்யா வேடத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். மாதவன், சமீரா ரெட்டி, அமலாபால் ஆகியோரது வேடங்களில் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
வேட்டை படத்தின் கதையை கேட்ட சல்மான் கான் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் ரீமேக் ஆகும் வேட்டை திரைப்படத்தையும் லிங்குசாமியே இயக்க உள்ளார்.
தமிழகத்தில் வேட்டை திரைப்படம் வெளியான உடன் இந்தி ரீமேக் ஒரு சில மாதங்களில் தொடங்க திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக