செவ்வாய், 3 ஜனவரி, 2012

வில்லியாக நடிக்க வேண்டும்: சினேகா


ஒரு திரைப்படத்திலாவது வில்லியாக நடிப்பது தான் தன்னுடைய கனவு என்று கூறியுள்ளார்  நடிகை சினேகா.
புன்னகை இளவரசியாக இளைஞர்கள் மனதில் நிலைத்துள்ள நடிகை சினேகா, தன் அழகாலும், வசீகர சிரிப்பாலும் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது காதல், திருமணம், படப்பிடிப்பு என்று பரபரப்பாக உள்ள சினேகாவிடம் சமீபத்தில் பேட்டி ஒன்று நடத்தப்பட்டது.
முன்பைவிட மிக அழகாகவும், புன்னகையுடன் காணப்பட்ட சினேகாவிடம் கல்யாணக்கலை வந்துவிட்டதா என்று கேட்டபோது, கொஞ்சம் வெட்கமும், சிரிப்பும் அவரது முகத்தில் தென்பட்டது.
பின்னர் அவர் கூறுகையில், நான் நடித்து வெளிவந்துள்ள தெலுங்கு படம் வெற்றியடைந்துள்ளதால் மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.
விரைவில் கோச்சடையான் மற்றும் பல படத்தில் நடிக்கவுள்ளேன் என்று கூறினார்.
சினிமாவிற்கு வந்து இதுநாள் வரை எத்தனையோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்கள் உங்களுக்கு கனவு கதாபாத்திரம் என்று ஏதாவது உள்ளதா என்று சினேகாவிடம் கேட்டபோது, ஒரு திரைப்படத்திலாவது வில்லியாக நடிப்பது தான் என் கனவு கதாபாத்திரம்.
ஆனால் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு இதுநாள் வரை அமையவில்லை என்று கூறினார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, அதைப்பற்றி இன்னும் யோசிக்கவே இல்லை என்று கூறியுள்ளார் நடிகை சினேகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக