செவ்வாய், 3 ஜனவரி, 2012

வருத்தமாக உள்ளார் தமன்னா


நடிகை தமன்னா அண்மையில் திருமலை திருப்பதி கோவிலுக்கு ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்து சென்றதால் பெரும் சர்ச்சைக்குள்ளானார்.
இதனால் ஆந்திராவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
பெருமாள் பக்தர்களும், வைணவப் பெரியவர்களும் தமன்னாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்கள்,  இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம் தமன்னா.
தன் தவற்றை உணர்ந்த தமன்னா தற்போது பரிகார பூஜை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறாராம். இதற்காக தலைசிறந்த ஜோதிடர் யார் என்று விசாரித்து வருகிறாராம்.
நடிகை தமன்னா தற்போது ஆந்திராவில் தான் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் தமிழக ஜோதிடர்களிடம் ஆலோசனை பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக