வெள்ளி, 6 ஜனவரி, 2012

கிருஷ்ணவேணி பாஞ்சாலையின் இசை வெளியீட்டு விழா: அப்துல் கலாம் பங்கேற்பு


தமிழ் திரையுலகில் முதன் முதலாக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், கிருஷ்ணவேணி பாஞ்சாலை படத்தின் இசையை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடக்கும் சினிமா நிகழ்ச்சிகளில் பார்க்க முடியாத மனிதரான நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.
சினிமா சம்பந்தப்பட்ட கலை நிகழ்ச்சி அல்லது திரையரங்கில் விழா வைத்தால் அப்துல் கலாம் வருவது சந்தேகம் என்பதால் நேராக அவர் தங்கியிருக்கும் விருந்தினர் இல்லத்துக்கே போய் அவர் கையால் இசையை வெளியிட வைத்து படக்குழுவினர்கள் வாழ்த்துப் பெற்றுள்ளனர்.
யதார்த்தமான கதைக் களத்தில் உருவாகியுள்ள படம் கிருஷ்ணவேணி பஞ்சாலை. வி.தனபால் இயக்கியுள்ளார். என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். வைரமுத்து, தாமரை பாடல்களை எழுதியுள்ளனர். மின்வெளி மீடியா தயாரித்துள்ளது.
படத்தின் பாடல்களை இயக்குநர் மகேந்திரன் வெளியிட, முதல் பிரதியை அப்துல் கலாம் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் இயக்குநர் தனபால், வி.பொன்ராஜ், இசையமைப்பாளர் ரகுநந்தன், திரைப்பட தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக