வெள்ளி, 6 ஜனவரி, 2012

குட்டி ஐஸ்வர்யாராய்க்கு பெயர் சூட்டு விழா


ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.
ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு செல்லமாக பேட்டி பி என்று பெயரிட்டனர்.
ஆனால் முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்டவில்லை. இந்நிலையில் ஏ என்ற எழுத்தில் தொடங்கும்படியான பெயரை தெரிவு செய்து அனுப்பும்படி ரசிகர்களுக்கு அபிஷேக் பச்சன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து நூற்றுக்கணக்கில் அவருக்கு பெயர்களை ரசிகர்கள் அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதை குடும்பத்தினர் தற்போது முடிவு செய்து விட்டனர்.
ஜனவரி மாதம் 13ம் திகதி பெயர் சூட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்காக அமிதாபின் வீடு இப்போதே களைகட்டி உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அமிதாப் பச்சனும், அவரது மனைவி ஜெயா பாதுரியும் செய்து வருகின்றனர். இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் மும்பை நட்சத்திரங்களும் பங்கேற்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக