வெள்ளி, 6 ஜனவரி, 2012

வருடத்திற்கு 2 படங்கள் மட்டுமே: ஹன்சிகா


வருடத்துக்கு 2 படம் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளதாக ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு எனக்கு திருப்தி தருவதாக இருந்தது. மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற படங்கள் குறிப்பிடும்படி அமைந்தது.
2012ம் ஆண்டு நல்லவிதமாக தொடங்கி இருக்கிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படப்பிடிப்பு ஜோர்டான், துபாயில் 10 நாட்கள் நடந்தது.
ஜோர்டனில் நடத்திய படப்பிடிப்பில் பங்கேற்றது ஏதோ சாதனை செய்துவிட்டு வந்ததுபோல் இருக்கிறது. அடுத்து சிம்புவுடன் வேட்டை மன்னன் படத்தில் நடிக்கிறேன்.
நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அவைகளில் குறிப்பிடும்படியான கதாபாத்திரம் எது என்று தெரிவு செய்து ஒப்புக்கொள்கிறேன்.
தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறேன். எனவே தமிழில் வருடத்துக்கு 2 படம் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக