செவ்வாய், 3 ஜனவரி, 2012

கார்த்தி மற்றும் அனுஷ்கா உடன் இணையும் நடிகைகள்


தமிழ் திரையுலகில் கார்த்தி, அனுஷ்கா இணைந்து நடிக்கும் படத்தில் நடிக்க தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் நடிகைகள் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் நாயகன் கார்த்தி சகுனி திரைப்படத்திற்கு பிறகு சுராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
நாயகன் கார்த்தியுடன் அனுஷ்கா இணைந்துள்ளார். இரண்டாம் நாயகியாக லட்சுமி ராய் நடிப்பதாக இருந்தது.
ஆனால் லட்சுமி ராய் திகதிகள் பிரச்சினையால் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து படக்குழுவினர் நடிகை நிகிதாவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
படத்தின் நாயகி அனுஷ்கா தான் அதில் எந்த வித மாற்றமும் இல்லை. இருப்பினும் முக்கியமான மூன்று கதாப்பாத்திரங்களில் நிகிதா, மேக்னா, சனுஷா ஆகியோர் நடிக்கிறார்கள். எதிர் வரும் 22 ம் திகதி படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்று இயக்குனர் சுராஜ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக