![]() |
கொலிவுட்டில் கே.எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான் 3 டி படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.![]() Motion Capturing தொழில் நுட்பத்துடன் ஹாலிவுட் படங்களான அவதார் மற்றும் டின் டின் போன்று கோச்சடையான் உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஆயத்த வேலைகளில் கடந்த சில மாதங்களாக ரவிக்குமாரும், சௌந்தர்யாவும் தீவிர ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கோச்சடையான் படத்தின் பூஜை எந்த ஆடம்பரமும் விளம்பரமும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து லதா ரஜினிகாந்த், பூக்கள், ஆரத்தி, தேங்காய் உடைப்பு என்று கோச்சடையான் பூஜை நடந்துள்ளது. என் கணவர் மீண்டும் திரையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். கோச்சடையானுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். பூஜை நடந்தது குறித்து சௌந்தர்யாவும் உறுதி செய்துள்ளார். அதே நேரம் படப்பிடிப்பு தொடங்கும் நாளில் விசேஷமாக ஒரு பூஜை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். |
திங்கள், 30 ஜனவரி, 2012
கோச்சடையான் திரைப்படத்திற்கு பூஜை
சட்டத்தரனியாக தோன்றும் சிம்ரன்
![]() |
கொலிவுட்டில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன், தற்போது சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருக்கிறார்.![]() இத்தொடரில் நடிகை சிம்ரன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் சட்டத்தரனியாக தோன்றி, அமெரிக்காவில் கொலைப்பழி சம்பந்தப்பட்ட ஒரு அப்பாவி பெண்ணிற்காக வாதாடுகிறார். வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தில் அமெரிக்காவிற்கு குடியேறி, அங்கே கொடுமைப்படுத்தப்படும் ஒரு அப்பாவி பெண்ணின் கதையே சுந்தரகாண்டத்தின் திரைக்கதையாகும். சுந்தரகாண்டம் நெடுந்தொடரில் சிம்ரனுடன் சின்னத்திரை நாயகி சுஜாதா இணைந்து நடித்துள்ளார். |
நகைச்சுவை நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்
![]() |
இடிச்சபுளி செல்வராஜ் உடல் நலக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார்.![]() இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது. இவருக்கு செல்வம் என்ற மனைவியும், வசந்தி என்ற மகளும் உள்ளனர். இடிச்சபுளி செல்வராஜின் தம்பிதான் நடிகர் பாண்டு. |
நடிகை ரீமா சென்னுக்கு திருமணம்
![]() |
கொலிவுட்டில் மின்னலே, தூள், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் ரீமா சென் நடித்துள்ளார்.![]() சமீபத்தில் ராஜபாட்டை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்நிலையில் நாயகி ரீமாசென்னுக்கு திருமணம் முடிவாகி அதற்கான திகதியும் வெளியிடப்பட்டுள்ளது. ரீமா சென், ஷிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை எதிர்வரும் மார்ச் 11ம் திகதி தலைநகர் புதுடெல்லி அருகே உள்ள மணமகனின் பண்ணை வீட்டில் திருமணம் செய்ய உள்ளார். இத்திருமணத்தில் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். திருமணத்திற்கான உடைகள் மிக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான புதிய ரகங்களில் நகைகள் வாங்கப்பட்டுள்ளன. தமிழ் நடிகர் நடிகைகளுக்கும் இந்த திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கிறார் ரீமா சென். இதற்காக விரைவில் சென்னையில் முகாமிட உள்ளார். |
கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்கவில்லை: சௌந்தர்யா
![]() |
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தி்ல் உருவாகி வரும் திரைப்படம் கோச்சடையான்.![]() இது குறித்து சௌந்தர்யா கூறுகையில், கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளங்கள் சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. என் தந்தையை வைத்து படம் இயக்குவது எனக்கு மிகவும் சந்தோஷமாகவுள்ளது. இப்படத்திற்கு ஓஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இயக்குனர் மேற்பார்வையாளராக கே.எஸ்.ரவிக்குமார் பணியாற்றுகிறார் என்று கூறியுள்ளார். |
ஓஸ்கர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்
![]() |
பில்லா 2 திரைப்படத்தில் தற்போது மிகவும் மும்மரமாக நடித்து வருகிறார் நடிகர் அஜீத்.![]() இப்படத்திற்கு தலைவன் இருக்கிறான் என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கு ஸ்டார் ரவிதேஜா, உலக நாயகன் கமலஹாசன் ஆகியோர் இத்திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடிக்கவுள்ளனர். தலைவன் இருக்கிறான் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
கனடா செல்லும் இரண்டாம் உலகப் படக்குழுவினர்
![]() |
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் இரண்டாம் உலகம்.![]() இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படப்பிடிப்பை நடத்துவதற்காக படக்குழுவினர் கனடா செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. இதனையடுத்து விரைவில் கனடா செல்லும் திகதி அறிவிக்கப்படுமென படக்குழுவினர் தெரிவித்துள்ளன. |
ரிச்சா ஓர் அழகு வற்றாத அருவி: வெங்கட்ராம்
![]() |
ஒவ்வொரு வருட காலண்டருக்காக நடிகர், நடிகைகளி்ன் புகைப்படகங்களை வேறு கோணத்தில் எடுப்பது புகைப்படப் பிடிப்பாளர் வெங்கட்ராமுடைய தனிச்சிறப்பு.![]() வெங்கட்ராம் எடுத்த புகைப்படங்களில் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய புகைப்படம் ரசிகர்களுக்கிடையே அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளது. இது குறித்து கலைஞர் வெங்கட்ராம் கூறியதாவது, பெண்களுக்கு கண்கள் மட்டும் அழகாக அமைந்தால் போதும் அவர்கள் என்ன உடை அணிந்தாலும் அது அழகாக இருக்கும். ரிச்சாவும் அப்படித்தான், அவர் ஓர் அழகு வற்றாத அருவி. அவர்களுக்கான உடையை அவர் மட்டும் தான் அணிய முடியும். ஒரு வலை மாதிரி இருந்த அந்த உடை ரிச்சாவிற்கு தவிற வேறு எந்த நடிகைகளுக்கும் ஒத்துவரவில்லை. காலண்டர் படப்பிடிப்பு முடிந்த பிறகு என்னை இப்படி அழகா எடுத்துட்டீங்களேன்னு தன்னைப் பற்றி அவரே புகழ்ந்து கொண்டார் ரிச்சா. இது ஒரு புகைப்படப்பிடிப்பாளருக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம் என்று அவர் கூறியுள்ளார். |
28வது பிலிம்பேர் விருது வாங்கியுள்ள ஏ.ஆர். ரஹ்மான்
![]() |
57வது பிலிம் பேர் விருதிற்கான முடிவுகள் நேற்று( 29.1.2012) அறிவிக்கப்பட்டுள்ளது.![]() இவ்விருது அவரது 28வது பிலிம் பேர் விருது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ராக்ஸ்டார் திரைப்படம் எனக்கு ஒரு மயில்கள் போன்றது, இதை என் நெஞ்சின் பக்கத்தில் வைத்து கொண்டாடி வருகிறேன். இத்திரைப்படத்திற்கான இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ராக்ஸ்டார் திரைப்படத்தில் நடித்த ரன்பீர் கபூருக்கு சிறந்த கதாநாயகன் விருதும், டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த கதாநாயகி விருதும் அளித்து, அவர்களை பிலிம்பேர் நிறுவனம் பெருமைப்படுத்தியுள்ளது. |
சமூக நோக்கத்துடன் செயற்படும் ஸ்ரேயா
![]() |
தென்னிந்திய படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாயகி ஸ்ரேயா, மலையாளத்தில் காசனோவா என்ற படத்தில் நடித்துள்ளார்.![]() காசனோவா திரைப்படம் ஹாலிவுட் பாணியில் ஆக்ஸன் மற்றும் திகில் படம் என்று திரையுலகில் கூறுகிறார்கள். இதையடுத்து இந்தியில் கலி கலி சொர் ஹை என்ற படத்தில் இல்லத்தரசி பாத்திரத்தில் ஸ்ரேயா வருகிறார். மேலும் இந்திய மொழிப்படங்களில் நடிப்பதில் ஸ்ரேயா ஆர்வம் காட்டினாலும் சமூக நோக்கத்தோடு சில காரியங்களை செய்து வருகிறார். மும்பையில் ஸ்ரேயாவுக்கு சொந்தமான ஸ்ரீ ஸ்பா(shree spa) என்ற நிறுவனத்தில் பார்வையற்றவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, நான் இப்படி சமூக நோக்கங்களோடு செய்கிற காரியங்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய செயலுக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். |
பவண் கல்யாணுடன் இணையும் காஜல் அகர்வால்
![]() |
தெலுங்கில் தற்போது வெளியாகிவுள்ள பிஸினஸ் மேன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.![]() இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பூரி ஜகன்னாத் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பவண் கல்யாணுடன் இணைந்து காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். பவண் கல்யாண் தற்போது ஹிந்தி மொழிமாற்றமான தபாங் திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் நடித்து வருகிறார். அதனால் தபாங் திரைப்படம் முடிந்த பிறகு பூரி ஜகன்னாத் இயக்கும் திரைப்படத்தில் அவர் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. |
சிந்து சமவெளி திரைப்படம் மீண்டும் வெளியிட வேண்டும்: அமலா
![]() |
சாமி இயக்கத்தில் வெளியான படம்தான் சிந்து சமவெளி. இப்படத்தில் மாமனாருடன் தகாத உறவு கொள்ளும் மருமகள் கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடித்திருந்தார்.![]() ஆரம்பத்தில் வெளியே தலைகாட்ட முடியாமல் இருந்த அமலா பால், அதன் பிறகு நடித்த மைனா, தெய்வத்திருமகள் போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளதால் இன்று முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிந்துசமவெளி பற்றி அமலா பால் கூறுகையில், நான் நடித்ததிலேயே நல்ல திரைப்படம் சிந்து சமவெளிதான். அந்தப் படத்தில்தான் எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது. தற்போது அந்தப் படத்தை மறுவெளியீடு செய்தாலும் ஒத்துழைக்க தயாராகவுள்ளேன். முடிந்தால் அந்த படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என்று சினிமா நண்பர்களிடம் அவர் கூறியுள்ளார். |
குழப்பத்தி்ல் உள்ள ஷாரூக் கான்
![]() |
சமீப காலமாக தமிழ்ப்படங்களை மொழிமாற்றம் செய்வதற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.![]() இந்நிலையில் தற்போது ஷாருக் கான் இரண்டு தமிழ்ப்படங்களை கையில் வைத்துக்கொண்டு அதில் எதை மொழிமாற்றம் செய்வது என்று முடிவு செய்ய முடியாமல் குழம்பியுள்ளார். அதில் முதல் படம் கமல் நடிப்பில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு, இரண்டாவது படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ரமணா. இந்த இரண்டு திரைப்படங்களில் எந்த ஒன்றில் நடிப்பது என்று குழம்பிப்போன ஷாருக் தனது சென்னை நண்பர்களிடம் இதைப் பற்றி கேட்டுள்ளார். அந்த இரண்டு திரைப்படங்களுமே பெரிய வெற்றிதான் என்று அவர்கள் பதில் கூறியுள்ளதால் ஷாரூக் மிகவும் குழம்பியுள்ளார். இறுதியில் ஷாருக், வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை தேர்ந்தெடுக்கவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. |
விலையுயர்ந்த நெக்லஸை முன்பதிவு செய்துள்ள கரீனா
![]() |
பாலிவுட்டின் நீண்டநாள் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சைப் அலிகானும், கரீனா கபூரும்.![]() இந்நிலையில் மார்ச் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். சைப் அலிகான் தன்னுடைய முதல்பட தயாரிப்பான ஏஜெண்டு வினோத் திரைப்படத்தின் வெளியீட்டு வேலையில் மும்முமரமாக உள்ளார். இந்தபடம் வெளியான பின்பு இவர்களது திருமணம் ஆடம்பரமாய் நடைபெறவுள்ளது. திருமணத்திற்காக நடிகை கரீனா கபூர் விலை உயர்ந்த ரத்தின கற்கள் பொறிக்கப்பட்ட 400 கிராம் எடை கொண்ட நெக்லசிற்கு முன்பதிவு கொடுத்துள்ளார். இதன் விலை ரூ.40 லட்சம் என்று கூறப்படுகிறது. அதேபோல் சைப்புக்கும் விலையுர்ந்த மோதிரம் ஒன்றை பரிசாக அளிக்க கரீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் |
ஹாலிவுட் பாணியில் நடித்துள்ள கணேஷ் வெங்கட்ராம்
![]() |
கொலிவுட்டில் அபியும் நானும் படத்தில் நடித்த கணேஷ் வெங்கட் ராம் பனித்துளி படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.![]() ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் ஒரு காதல் கதையை உருவாக்கியுள்ளார்கள். பனித்துளி படத்தில் சென்னையில் வசிக்கும் பையனாக நடித்துள்ளேன். பனித்துளியில் இரு வேடங்களில் நடித்துள்ளேன். ஹாலிவுட் அலங்கார கலைஞர் ரோஸ் ஹில் படத்தின் கதைக்கேற்ப என் தோற்றத்தை மாற்ற கடுமையாக உழைத்துள்ளார். காதல் தோல்வியால் இந்தியாவே வேண்டாம் என்று அமெரிக்கா செல்லும் நாயகன் அங்கே சந்திக்கும் திகிலூட்டும் சம்பவங்களே படத்தின் திரைக்கதை. இதில் என்னுடன் கல்பனா பண்டிட், ஷோபனா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள் என்று பனித்துளி பட நாயகன் கணேஷ் வெங்கட் ராம் தெரிவித்துள்ளார். |
திரிஷாவுக்கு பாராட்டுக்கள்
![]() |
கொலிவுட், டோலிவுட், பாலிவுட் என்று மூன்று மொழிகளிலும் நாயகி திரிஷா பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.![]() இதையடுத்து நடிகை திரிஷா தெலுங்கில் நடித்த பாடிகார்ட் வெற்றி அடைந்துள்ளது. பாடிகார்ட்டில் திரிஷாவின் நடிப்பைப் பார்த்து திரையுலகத்தினர் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். இதனால் நாயகி திரிஷா மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடனும், தமிழில் விஷாலுடனும் சமரன் திரைப்படத்திலும் திரிஷா நடிக்கிறார். இரு படங்களும் இன்னொரு நிலைக்கு தன்னை கொண்டு செல்லும் என்று நாயகி திரிஷா எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். |
புதன், 25 ஜனவரி, 2012
பத்ம விருது பெரும் சினிமா கலைஞர்கள்
![]() |
இந்தியாவின் உயர்ந்த விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டிற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.![]() பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி, சினிமா இயங்குனர் மீரா நாயர், இசை கலைஞர்கள் டி.வி. கோபாலகிருஷ்ணன், எம்.எஸ். கோபால கிருஷ்ணன், மற்றும் பிரபல இதய சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி உட்பட 27 பேர் பத்ம பூசன் விருதுக்கு தெரிவு செய்யப் பட்டுள்ளனர். பத்ம ஸ்ரீ விருதுக்கு ஹொக்கி அணியின் முன்னாள் தலைவர் ஸபர் இக்பால், பெண்கள் கிரிக்கட் அணியின் கப்டன் ஜூலன் கோஸ்வாமி, வில்வித்தை வீரர் லிம்பா ராம், வைத்தியர்கள் வி.எஸ். நடராஜன், வி. மோகன், சமூக ஆர்வலர் பி.கே.கோபால் உட்பட 77 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். |
சித்தார்த்தின் சொதப்பல் அனுபவங்கள்
![]() |
இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்து தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி பாலிவுட் படத்திலும் சித்தார்த் நடித்தார்.![]() இயக்குனர் பாலாஜி மோகனின் பத்து நிமிட குறும்படம் என்னை மிகவும் கவர்ந்தது. காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடிப்பதோடு தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளேன். இந்த அழகான காதல் படத்தில் அமலா பால் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் தலைப்பை ரசிக்கிறவர்கள் என்னிடம் நிஜ வாழ்க்கையில் சொதப்பிய அனுபவத்தை கேட்கிறார்கள். என் பள்ளிப்பருவ நாட்களில் இருந்து நிறைய சொதப்பல் அனுபவங்களை சொல்லலாம். இந்தப்படத்தை அனைத்து வயதினரும் ரசிக்கும்படியாக எடுத்து வருகிறோம். இந்திய மொழிகளில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆங்கிலத்திலும் நான் நடித்துள்ளேன். இந்த ஆண்டிலிருந்து நிறைய தமிழ் படங்களில் நடிப்பதாக முடிவெடுத்துள்ளேன் என்று 'காதலில் சொதப்புவது எப்படி' பட நாயகன் சித்தார்த் தெரிவித்துள்ளார். |
கொலை வெறி பாடல்: விவேகா கருத்து சொல்ல மறுப்பு
![]() |
கொலிவுட்டில் கவிஞர் விவேகா எழுதிய ஆனந்தம், ரன், சமுத்திரம், வானத்தைப்போல, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படப்பாடல்கள் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் வெற்றி பாடல்களாக வலம் வந்தன.![]() சமீபத்தில் விவேகா கூறியதாவது, கொலிவுட்டில் தற்போது என்னிடம் என்பதுக்கும் மேற்ப்பட்ட படங்கள் இருக்கின்றன. சூர்யா நடிக்கும் மாற்றான், சிங்கம் -2 , சகுனி, கரிகாலன், அரவான், வல்லினம், சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு, இஷ்டம், பூலோகம் என்று வரிசையாக படங்களுக்கு பாடல்களை எழுதுகிறேன். என்னுடைய பாடல்கள் அனைத்து தரப்பினர் மத்தியிலும் வெற்றிப் பாடல்களாக ஒலிப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. சமீபத்தில் என் பாடல்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. துனுஷ் எழுதிய 'கொலை வெறி'பாடல் பற்றி என்னிடம் கருத்து கேட்டுள்ளார்கள். அந்தப்பாடல் பற்றி எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று கவிஞர் விவேகா தெரிவித்துள்ளார். |
மீண்டும் திரைக்கு வரும் நயன்தாரா
![]() |
தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணன் மற்றும் நடிகை நயன்தாரா நடித்து வெற்றியடைந்துள்ள திரைப்படம் ஸ்ரீ ராம ராஜ்யம்.![]() இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா ஜோடியாக ஒர் புதிய திரைப்படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா. தசரத் இயக்கும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையாகும். நயன்தாரா, நாகார்ஜுனா ஜோடி ஏற்கெனவே பாஸ் ஐ லவ்யூ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாரா திரையுலகில் மீண்டும் நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார. தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதால், தமிழ்ப் படங்களிலும் விரைவில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று கொலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
வெங்கட் பிரபுவுடன் கூட்டணியமைக்கும் சூர்யா
![]() |
நடிகர் சூர்யா நடித்து விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் மாற்றான்.![]() இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் நடிகர் சூர்யா மாற்றான் முடிந்த கையோடு வெங்கட் பிரபு படத்திற்கு திகதிகள் தந்துள்ளார். இது குறித்து சூர்யா கூறுகையில், இது ஒன்றும் திடீரென்று எடுத்த முடிவல்ல. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே வெங்கட் பிரபுவும் நானும் சேர்ந்து படம் பண்ணுவதைப் பற்றி பேசித்துதான் வருகிறோம். சில தினங்கள் முன்புவரை சரியான திரைக்கதை அமையாமல் இருந்தது. சமீபத்தில் வெங்கட் பிரபு கூறிய கமெடி கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக்கதையை வைத்து தற்போது படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தை தயாரிக்க இருப்பது ஞானவேல் ராஜாவின் க்ரீன் ஸ்டுடியோஸ் என்பது குறிப்பிடத்தக்கது. |
போர் பிரேம்ஸ் திரையரங்க நிர்வாகி மகனுக்கு இன்று திருமணம்: ரஜினிகாந்த் வாழ்த்து
![]() |
தமிழ் திரையுலகிலும் பத்திரிகை உலகிலும் போர் பிரேம்ஸ் திரையரங்கின் நிர்வாகி கல்யாணம் மிகவும் பிரபலமானவர்.![]() இவரது மகன் சதீஷ் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். இவருக்கும் அஞ்சலிக்கும் இன்று(25.1.2012) காலை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமண விழாவுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். காலை 10 மணிக்குப் பிறகு(இந்திய நேரம்) சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்த பிறகே திருமணம் நடந்தது. திரையுலக நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தோடு வந்திருந்து வாழ்த்தினர். சரத்குமார்-ராதிகாவும் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினர். இன்று மாலை அதே மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. ![]() ![]() |
தமிழிலும் கவனம் செலுத்துவேன்: சித்தார்த்
![]() |
காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.இப்படத்தில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.![]() நான் தமிழ்ப்படங்களில் அதிகம் நடிக்காமல் ஹிந்தியிலும், தெலுங்கிலும் கவனம் செலுத்துவதுதான் இதற்கு காரணம் என்பதை புரிந்துகொண்டேன். இந்தத்தவறு இனிமேல் நிகழாமல் பார்த்துக்கொள்வது என்று உறுதியான முடிவு எடுத்துக்கொள்கிறேன். இனி வருடத்திற்கு இரண்டு திரைப்படங்களாவது தமிழில் நடிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தைப் பற்றி அவர் கூறுகையில், இத்திரைப்படம் பத்து நிமிட குறும்படமாக இருந்து பெரும்படமாக மாறியுள்ளது. ஆனால் பத்து நிமிட குறும்படத்தில் இருந்த சுவாரசியத்தை இரண்டு மணி நேர திரைப்படத்திலும் கொண்டு வந்துள்ளார் இயக்குனர் பாலாஜி என்று கூறியுள்ளார். |
ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட மாட்டேன்: ரிச்சா கங்கோபாத்யாய
தெரிவித்துள்ளார் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய. |
தமிழில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த சிறுத்தை திரைப்படத்தை ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ஹிந்தியில் இயக்கி வருகிறார் நடிகர் பிரபுதேவா.![]() இப்படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு மட்டும் நடனமாட ரிச்சா கங்கோபாத்தியாய ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ரிச்சா கூறுகையில், முக்கியமான திரைப்படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் சில ஹிந்திப்படங்களை மறுத்தேன். இதனால் என் மீது கோபம் கொண்டு ஒரு சிலர் வேண்டுமென்றே இது போன்ற வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள். ரவுடி ரத்தோர் திரைப்படத்தில் என்னை ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாட இதுவரை எவருமே கேட்டதில்லை. அப்படியே கேட்டிருந்தாலும் ஒரு பாடலுக்கு மட்டும் நான் நடனமாட மாட்டேன் என்று தீர்மானமாய் கூறியுள்ளார். |
கௌதம் மேனன் தயாரிப்பில் ஜெய்
![]() |
கெளதம் மேனன் தயாரிப்பில் நடிக்கும் ஜெய் படத்தை இயக்குபவர் பிரபுதேவாவிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.![]() முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கௌதம் திரைக்கதை அமைத்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரு முறை ஜெய்யை கௌதம் மேனன் அழைத்து தன் படத்தில் ஒப்பந்தம் செய்ய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார். படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததால் ஜெய் போகவில்லை. பின்னர் தன்னை கௌதம் ஒப்பந்தம் செய்ய அழைத்துள்ளார் என்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு நடித்த பாத்திரத்திற்காக என்றும் தெரிய வந்தது. எங்கேயும் எப்போதும் படம் வெளியானதும் கௌதம் போன் செய்து ஜெய்யை வாழ்த்தினாராம். இருவரும் சேர்ந்து சீக்கிரம் படம் செய்வோம் என்று சொன்னவர், தன் தயாரிப்பில் ஜெய்யை ஒப்பந்தம் செய்திருக்கிறார். விரைவில் கௌதம் மேனன் இயக்கத்திலும் நடிக்க இருப்பதால் விண்ணைத்தாண்டி வருவாயாவில் தவற விட்ட வாய்ப்பை இப்படத்தின் மூலம் அடைந்ததற்காக ஜெய் சந்தோஷத்தில் இருக்கிறார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)