வியாழன், 15 டிசம்பர், 2011

மல்லிகாவை மயக்கிய தனுஷின் Why This Kolaiveri பாடல்


சமீபத்தில் தமிழ்நாடு, இந்தியாவையும் கடந்து, உலகம் முழுக்க ஒரு கொலைவெறி காயச்சல் வேகமாக தொற்றி கொண்டு இருக்கிறது.
இப்போது அந்த காய்ச்சல் பாலிவுட்டின் கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத்தையும் தொற்றிக்கொண்டுள்ளது.
தனுஷின் கொலைவெறி பாடல் சிறுசு முதல் பெருசு வரை பலரையும் கவர்ந்துள்ள நிலையில் இப்போது மல்லிகாவுக்கும் ரொம்ப பிடித்து போய்விட்டதாம்.
அதாவது மல்லிகா ஷெராவத் ஒவ்வொரு புத்தாண்டிற்கும் ஒரு பெரிய தொகைக்கு ஸ்டார் ஹோட்டலில் நடனம் ஆடுவார். அதேபோல் இந்த புத்தாண்டுக்கும் ஒரு பெரிய ஹோட்டலில் நடனமாட இருக்கிறாராம்.
இந்த வருடம் அவர் ஆடுவதற்கு தேர்ந்தெடுத்துள்ள பாடல் கொலைவெறி பாடல். இந்த வருடம் “கொலை வெறி” பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதால் அதை தேர்வு செய்து ஆட உள்ளாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக