சனி, 17 டிசம்பர், 2011

புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவான இளசுகள் திரைப்படம்


தமிழ் திரையுலகில் புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ள இளசுகள் திரைப்படத்தை புதுமுக இயக்குனர் கமல் ஆதித்யா இயக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஸ்ரீகனக துர்கா மூவிஸ் தயாரிக்கும் இளசுகள் திரைப்படத்தில் புதுமுக நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படத்தில் புதுமுக நாயகனாக பிரபு, பெங்களூரு அழகி சுஸ்மா, புனே அழகி ஆஸ்கா இவர்களுடன் ஜி.கே.சீதா, ராஜா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
இளசுகள் திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஜி.ஸ்ரீராம், பிரபல எழுத்தாளர் களக்காடு ராஜசேகர், ஒளிப்பதிவு-பீமா பிரகாஷ், நடனம்-விஜய பாஸ்கர் மற்றும் பலரும் பணியாற்றியுள்ளார்கள்.
இப்படத்திற்கு கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கும் புதுமுக இயக்குனர் கமல் ஆதித்யா, வாழ்க்கையில் தவறு செய்தவர்கள், செய்து கொண்டிருப்பவர்கள், இனி தவறு செய்யப்போகிறவர்களை மையப்படுத்தி இளசுகள் திரைப்படத்தை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இளசுகள் திரைப்படத்தில் வரும் மன்மதன் கோட்டை, மன்மதன் மந்திர பூஜை நடக்கிறதே என்ற இறுதிப்பாடலை நடுக்கடலில் படமாக்கியுள்ளார்கள். இப்பாடலுக்காக 4 காணொளிக்கருவிகளும், 5 படகுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக