ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பாலிவுட் நடிகை கேத்ரினாவிற்கு முதலிடம்


இணையதள தேடலில் அதிகமான ரசிகர்கள் பாலிவுட் நடிகை கேத்ரினா கைபை தேடியுள்ளார்கள் என்று கூகுள்(Google) நிறுவனம் தெரித்துள்ளது.
இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் பிரபலமான நடிகைகளுல் ஒருவர் கேத்ரினா கைப். இவர் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களான ஷாருக்கான், சல்மான் கான், போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் உலக அளவில் வெற்றி பெற்றுள்ளன.
சமீபத்தில் பிரபல இணையதள நிறுவனமான கூகுள் நடத்திய ஆய்வில், உலக அளவில் அதிகமான ரசிகர்கள் கேத்ரினா கைபைத் தான் தேடியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
கூகுள் வெளியிட்ட முதல் 10 இடங்களில் கேத்ரினா கைபுக்கு முதலிடமும், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேக்கு 2வது இடமும் கிடைத்துள்ளது. இவர்களைத் தொடர்ந்து சல்மான் கான், மாடல் அழகி பூனம் பாண்டே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா பச்சன் 6வது இடத்திலும், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 7வது இடத்திலும் உள்ளனர். மேலும் பிரியாங்கா சோப்ரா, கரினா கபூர் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக