![]() |
இசைஞானி இளையராஜா மேடையில் தோன்றி இசை கச்சேரி நடத்த இருக்கிறார்.![]() ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இளையராஜாவை வைத்து "என்றென்றும் ராஜா" என்ற தலைப்பில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. இளையராஜாவின் இசையமைப்பில் உருவான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் இருந்து, குறிப்பிட்ட சில பாடல்களை மட்டும் தெரிவு செய்து இந்த நிகழ்ச்சியில் பாட இருக்கிறார்கள். இதற்காக கடந்த சில நாட்களாக ஒத்திகையும் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் சேர்ந்து பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.யேசுதாஸ், சித்ரா, பவதாரணி உட்பட பலரும் பங்கேற்று பாட உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் நுழைவு சீட்டிற்காக உலகம் முழுக்க இருக்கின்ற இளையராஜா ரசிகர்கள் மின்னஞ்சலிலும், நேரிலும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். நுழைவு சீட்டு விற்பனை தெடாங்கிய இரண்டு நாளிலேயே கிட்டத்தட்ட 80 சதவீதம் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை காண அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். தனது மனைவி ஜீவா இறந்த பின்னர், இசைஞானி பங்கேற்கும் முதல் இசை நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. 28ம் திகதி நடக்கும் இந்த நிகழ்ச்சி, ஜெயா தொலைக்காட்சியில் பொங்கல் அன்று ஒளிப்பரப்பாகிறது. |
செவ்வாய், 27 டிசம்பர், 2011
ஜெயா தொலைக்காட்சியின் என்றென்றும் ராஜா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக