சனி, 17 டிசம்பர், 2011

வேட்டை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா


தமிழ் திரையுலகில் லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் ஆர்யா, மாதவன் நடித்துள்ள வேட்டை திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னை அண்ணா நூலக மண்டபத்தில் யு.டிவி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் நடத்தியுள்ளது.
இந்த விழாவில் ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி, இயக்குனர் லிங்குசாமி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் வண்ணமயமான ஒளி வெள்ளத்தில் உற்சாகமாக நடனமாடி, விழாவை சிறப்பித்துள்ளார்கள்.
ரன் திரைப்படத்தில் வரும் ஷட்டர் காட்சியின் மூலமாக ரசிகர்களின் மனதில் என்னை ஆக்ஸன் நாயகனாக கொண்டு சேர்த்தவர் இயக்குனர் லிங்குசாமி. பாலிவுட் திரைப்படங்களைப் போல பெரிய நிதியில் வேட்டை திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்று மாதவன் பாராட்டியுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனராக பணியாற்றி பத்தாண்டு நிறைவடைந்ததை கொண்டாடிய லிங்குசாமி, வேட்டை திரைப்படத்தில் மாதவன், ஆர்யா இருவரும் அண்ணன்-தம்பியாக நடித்துள்ளார்கள்.
பயந்த சுபாவம் கொண்ட பொலிசாக மாதவனும், துணிச்சலான நாயகனாக ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளார்கள். ரன் படத்துக்கு பிறகு, நானும் மாதவனும் வேட்டையில் இணைந்துள்ளோம்.
மாதவன் மட்டுமே இந்தப்படத்தின் பொலிஸ் பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரின் திகதிகளுக்காக காத்திருந்து, அவரை வேட்டையில் நடிக்க வைத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
வேட்டை திரைப்படத்தின் இசை குறுந்தகடை இயக்குனர் ஷங்கர் வெளியிட விழா மேடையில் இருந்த திரையுலக பிரபலங்கள் பெற்றுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக