செவ்வாய், 20 டிசம்பர், 2011

மீண்டும் சீதாவாக நடிக்க நயன்தாராவுக்கு நாகார்ஜுனா அழைப்பு


மீண்டும் சீதாவாக நடிக்க நடிகை நயன்தாராவுக்கு அழைப்பு விட்டிருக்கிறார் நடிகர் நாகார்ஜுனா.
ஸ்ரீ ராமராஜ்யம் படத்தில் என்.டி.பாலகிருஷ்ணா ராமர் வேடத்தில் நடிக்க, சீதை வேடத்தில் நயன்தாரா நடித்தார். பிரபுதேவாவை மணக்க உள்ளதால் இப்படத்துக்கு பிறகு புதிய படங்கள் எதையும் நயன்தாரா ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில் ராம் கோபால் வர்மா “ராவணா” என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் படம் இயக்குகிறார். ராமாயணத்தை மையமாக கொண்ட கதை என்றாலும் புராண வடிவில் இல்லாமல் தற்போதைய சூழலில் நடக்கும் கதையாக அமைத்திருக்கிறார்.
இதில் ராமரின் குணம் கொண்ட பாத்திரத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார். சீதையாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று நாகார்ஜுனா விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும் போது, ஏற்கனவே பக்தி படங்களில் நடித்திருக்கிறேன். ராமாயணம் கதையில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் அதில் நயன்தாராவை சீதையாக நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். அந்த வாய்ப்பு இப்போது வந்துள்ளது. சீதையாக அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.
இதுபற்றி இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் கேட்டபோது, இப்போதைக்கு இதுபற்றி எதுவும் என்னால் சொல்ல முடியாது. படத்தை விரைவில் தொடங்குவதற்கான வேலையில் பிஸியாக இருக்கிறேன். நயன்தாரா மீண்டும் சீதையாக நடிப்பாரா என்பது குறித்து இப்போது எதையும் வெளிப்படுத்த முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக