![]() |
அறிந்தும் அறியாமலும், பட்டியல், குண்டக்க மண்டக்க, நர்த்தகி ஆகிய படங்களை தயாரித்த புன்னகைப்பூ கீதா, அடுத்து தயாரித்துள்ள படம் “ஒரு நடிகையின் வாக்குமூலம்”. நடிப்பதற்காக சென்னைக்கு வாய்ப்பு தேடி வரும் சோனியா அகர்வால் ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். அந்த வீட்டுக்கு அருகில் படப்பிடிப்பு நடக்கிறது. ஜித்தன் ரமேஷ் - ரிஷா இருவரும் ஆடிப்பாட பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. ரிஷா இடத்தில் சோனியா அகர்வால் தன்னை நினைத்துப் பார்க்கிறார். இப்படி ஒரு காட்சி ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்துக்காக படமாக்கப்பட்டுள்ளது. நாககிருஷ்ணன் ஒளிப்பதிவில் ராஜ்கிருஷ்ணா இயக்கிய இப்படத்திற்கு ஆதீஷ் இசையமைத்துள்ளார்.புன்னகைப்பூ கீதாவும் சிங்கப்பூர் பாடகர் ராதாகிருஷ்ணனும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். விக்ரமன், ஏ.வெங்கடேஷ், ராசு மதுரவன், சுராஜ் ஆகியோர் இந்தப் படத்தில் தயாரிப்பாளராகவே நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. |
சனி, 17 டிசம்பர், 2011
கவுரவ வேடத்தில் ஜித்தன் ரமேஷ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக