திங்கள், 19 டிசம்பர், 2011

தாஜ்மஹாலில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி


ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இந்தி படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா தாஜ்மஹாலில் நடைபெறுகிறது.
அங்கு அவர் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். சிம்பு, த்ரிஷா ஜோடியாக நடித்த படம் “விண்ணை தாண்டி வருவாயா”.
இப்படம் இந்தியில் “ஏக் தீவானா தா” என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. பிரதீக், எமி ஜாக்ஸன் நடிக்கின்றனர். கௌதம் மேனன் இயக்கும் இப்படத்துக்கும் ரகுமானே இசை அமைக்கிறார்.
காதல் கதை என்பதால், பாடல் வெளியீட்டு விழாவை காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து கௌதம் மேனன் கூறும்போது, தாஜ்மஹாலில் பாடல் கேசட் வெளியீடு செய்யப்படுகிறது. அப்போது ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் பிரதீக், எமி ஜாக்ஸனின் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக