![]() |
நயன்தாரா 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். அதன் பிறகு புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லை.![]() இந்த நிலையில் பிரபல இந்தி இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது படத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியாயின. அவர் ராவணன் கதையை கருவாக வைத்து அதே பெயரில் படம் எடுக்கவுள்ளார். இப்படத்தில் ராவணனின் மனைவி மண்டோதரி வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் கேட்டதாக கூறப்பட்டது. அவர் நடிப்பாரா? மாட்டாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவர் கூறும்போது, நயன்தாராவுக்கு மண்டோதரியாக நடிக்க விருப்பம் இல்லை. ஏற்கனவே இயக்குனர்கள் பவன் கல்யாண், மகேஷ்பாபு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது, ஆனால் நயன்தாரா மறுத்துவிட்டார் என்று கூறினார். |
சனி, 31 டிசம்பர், 2011
மண்டோதரியாக நடிக்க விருப்பமில்லை: நயன்தாரா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக